கோதுமை மாவின் விலை தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Wheat flour price in Sri Lank: Today News in Tamil - இன்றைய செய்தி

கோதுமை மாவின் விலையை (wheat flour price in sri lanka) அதிகரிப்பதில்லை என இறக்குமதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அதன் இறக்குமதி நிறுவனங்களுக்கும், ஜனாதிபதி செயலாளர் மற்றும் நிதி செயலாளர் ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து குறித்த நிறுவனங்கள் கோதுமை மா விலையினை அதிகரிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெதுப்பக உற்பத்திகளுக்கான கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்படமாட்டாது.

அந்த நிறுவனங்கள் கோதுமை மா விலையினை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் விலையினை அதிகரிப்பதால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்திற்கொண்டு கோதுமை மா வின் விலையை அதிகரிக்கபோவதில்லை என்ற நிலைப்பாட்டிலே அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு எவ்விதத்திலும் அனுமதியளிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகரித்துள்ளது.

இதேவேளை கூடுதலான விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி, தொடர்ச்சியான தேடுதல்கள் முன்னெடுக்கப்படும் என அந்த அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்க (ஓய்வு பெற்றவர்) தெரிவித்தார்.

Wheat flour price in Sri Lank: Today News in Tamil - இன்றைய செய்தி

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 12 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என பிரிமா நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கொழும்பில் நேற்று (05) ஊடகவியலாளர், சந்திப்பொன்றை நடத்திய கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன,

“கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்பின்னர், விலையை (wheat flour price in sri lanka) அதிகரிக்கமாட்டோம் என அந்நிறுவனங்கள் உத்தரவாதம் அளித்துள்ளன” என்றார்.

Leave a Reply