தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணியில் செய்யப்பட்ட மாற்றம்?

sl vs sa போட்டியில் மாற்றம்? - விளையாட்டு செய்திகள்

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு (sl vs sa) இடையிலான மூன்றாவதும் இறுதியுமான தீர்மானமிக்க ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 14 ஓட்டங்களால் வெற்றிபெற்ற போதிலும் இரண்டாவது போட்டியில் 67 ஓட்டங்களுக்கு தென் ஆபிரிக்காவிடம் தோல்வியடைந்திருந்தது. அதற்கமைய, இன்று இடம்பெறவுள்ள போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்தப் போட்டியில் (sl vs sa) வெற்றிபெறும் அணி, எதிர்வரும் இருபது20 உலகக்கிண்ணப் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் சந்தர்ப்பமும் காணப்படுகிறது.

இன்றைய போட்டியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் எதிர்வுகூறலொன்றை முன்வைத்த பயிற்றுவிப்பாளர் மிகி ஆர்தர், பெரும்பாலும் 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷவுக்கு பதிலாக சிரேஷ்ட முன்வரிசை துடுப்பாட்ட வீரர் தினேஸ் சந்திமால் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

அவ்வாறே, விக்கெட் காப்பில் சிறப்பான திறன்களை வெளிப்படுத்த தவறிவரும், மினோட் பானுகவுக்கு பதிலீடாக சந்திமால் களமிறக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே இன்றைய போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வரிசை பலப்படுத்துவதற்கு, வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவுக்கு வாய்ப்பளிக்ககூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் எதிர்வுகூறலொன்றை முன்வைத்தார்.

sl vs sa போட்டியில் மாற்றம்? - விளையாட்டு செய்திகள்

சுழற்பந்து வீச்சாளர்களான அகில தனஞ்சய அல்லது பிரவீன் ஜயவிக்ரமவுக்கு பதிலாக ரமேஷ் மெண்டிஸ் அல்லது மகேஷ் தீக்ஷன அணியில் இணைத்துக்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, அகில தனஞ்சய அல்லது பிரவீன் ஜயவிக்ரமவுக்கு பதிலாக பினுர பெர்னாண்டோவை அணியில் இணைத்துக்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் புத்திசாதுர்யமான செயலாக அமையும் என தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, முன்வரிசை வீரர் பானுக ராஜபக்ஷவுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் அதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

Leave a Reply