தீவிர சுகாதார வழிக்காட்டலின் கீழ் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்

School opening news - Sri Lanka Latest News in Tamil - செய்திகள்

School opening news – பாடசாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ள நிலையில் தீவிர சுகாதார பாதுகாப்பு வழிக்காட்டலின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நடத்தி செல்லப்படும் என பிரதி சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் வைரஸ் தொற்று நோயாளர் பாரிய அளவில் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறாக சுகாதார பாதுகாப்பு வழிக்காட்டலின் கீழ் பாடசாலைகளை நடத்தி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்  குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் குறையும் சந்தர்ப்பங்களில் குறைந்த சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் பாடசாலைகளை திறந்து நடத்தி செல்ல முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதார பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகள் இணைந்து இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க நடவடிக்கை எடுப்பார்கள். அதனை திறப்பதற்கு தாமதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதென தான் ஒரு போதும் நினைக்கவில்லை என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்  மேலும் தெரிவித்துள்ளார். School opening news

School opening news - Sri Lanka Latest News in Tamil - செய்திகள்

மேலும் இலங்கைச் செய்திகள் இன்று

ஜனாதிபதி செயலாளர் வௌியிட்ட விஷேட அறிவிப்பு

காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை

மூன்று மாதங்களில் உயிரிழக்கப் போகும் முக்கிய பிரமுகர் – பகீர் தகவலை வௌியிட்ட பிக்குனி

Leave a Reply