Nipple Pain Causes – மார்பக வலி காரணம் என்ன? நீங்க என்ன செய்ய வேண்டும்?

Nipple Pain Causes - Ceylon Nation | News | Sports | Health | Cinema

Nipple Pain Causes மார்பகம் மற்றும் மார்பக காம்புகளில் வலி ஏற்படக் காரணம் என்ன?

Nipple pain causes – மார்பக வலி, இன்று உலகளவில் பொதுவாக பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளில் ஒன்று. மார்பகத்தில் வலியோ புண்ணோ ஏற்படுவது பெண்களுக்கு இயல்பான ஒன்றாகும்.

பெண்களில் பதின்ம வயது, இளவயது, நடுத்தரவயது, 50 வயதை கடந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சினை ஏற்படுவது பொதுவான ஒன்றாக உள்ளது.

இன்று 70 சதவீத பெண்கள் இந்த மார்பு வலி பிரச்சினையை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக பெண்கள் வெட்க சுபாவம் உடையவர்கள் என்பதால் தங்களின் அந்தரங்க பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்கு பெரும்பாலும் விரும்பமாட்டார்கள்.

என்றாலும் வழக்கமாக, பெண்களுக்கு ஏற்படுகின்ற மார்பக வலி என்பது ஒரு தீவிரமான அல்லது பாரதூரமான பிரச்சினை அல்ல. பல பெண்கள் அடிக்கடி இவ்வாறு மார்பக வலி ஏற்படுவதை மார்பகப் புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் எனக் கவலைப்படுவர், ஆனால் அவ்வாறு இருப்பது அரிதானது ஆகும்.

இருந்தாலும், அடிக்கடி மர்பக வலி ஏற்படுவதை அலட்சியம் செய்யாமல் உடனடியான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பெறுதல் அறிவுறுத்தத்தக்கது ஆகும்.

சரி இந்தப் பதிவில் மார்பக வலி ஏற்பட காரணம் என்ன? அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றிய சில முக்கிய தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மார்பக வலி ஏற்பட காரணம் என்ன? (Nipple Pain Causes)

பொதுவாக பெண்களுக்கு மார்பக வலி ஏற்பட காரணம் (Nipple Pain Causes) என்று பார்த்தால் அவர்களது மாதவிடாய் தான்.

மார்பக வலி வந்தாலே அது மார்பக புற்றுநோய் தான் இருக்கும் என்னும் சுய முடிவுக்கு வந்து பயந்து விடும் பெண்கள் மனரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.

ஆனால் பெண்களுக்கு வரும் மார்பு வலி எல்லாம் மார்பக புற்றுநோய் அல்ல. மார்பக புற்றுநோய் என்பது மார்பகத்தில் கட்டிகளை உண்டாக்கும். மிக முக்கியமாக அவை எந்தவிதமான வலிகளையும் உண்டாக்காது.

ஆகவே பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலி எல்லாமே புற்றுநோயாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் இறுதி காலம் அதிகளவு பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த சமயத்தில்., சருமத்தில் ஏற்படும் வறட்சியின் காரணமாக அரிப்புகள் மற்றும் மார்பகத்தில் வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அத்துடன் மார்பக வலி எதனால் வருகிறது என்றால் அதிக சதவீதம் ஹார்மோன் பிரச்சினைதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புகையிலை, மது, போதை மருந்துகள், இன்ன பிற போதைப் பழக்கங்களும் கூட மார்பக வலிக்கு (Nipple Pain Causes) காரணமாகலாம்.

சமீபத்திய ஆய்வின் படி புகை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு இந்த ஹார்மோன் பிரச்சினை உண்டாகி றது.

அவை, உங்கள் உடலில் உள்ள பாலுறவு ஹார்மோன்களின் அளவில் சமநிலையின்மையினை ஏற்படுத்தி, மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு மார்பக பிரச்சினைகள் ஏற்படும் அதிக பட்ச அபாயத்துக்கு, உங்களை உள்ளாக்குகின்றன.

ஆகவே புகை பிடிக்கும் பழக்கம் உட்பட போதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு இந்த மார்பு வலி ஏற்படும் என்பதுடன், அது ஆபத்தானதாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் இன்னும் சில பெண்களுக்கு தசை வலியால் கூட மார்பு வலி உண்டாகும். இதற்கு காரணம் அவர்கள் சரியான உள்ளாடைகள் அதாவது முக்கியமாக சரியான பிரா அணியாததே. இவர்களை முழுமையாக பரிசோதனை செய்வதன் மூலம் வலிக்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள் மருத்துவர்கள்.

பெண்களின் மார்பக காம்புகள் இயற்கையாகவே மென்மையாக இருக்கும் என்பதுடன், அதிகளவு உணர்ச்சி கொண்ட பகுதியாகவும் அமையப்பெற்றது.

இதனால் மார்பகத்தின் அளவிற்கு ஏற்றது போல மார்பக கச்சையை (பிரா) அணியாமல் இறுக்கமான அல்லது சிறிய கப் உடைய பிராவை நாள் முழுக்க அணிவதால் பெரும்பாலான பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது.

இவ்வாறு அசௌகரியமாக உணரும் பட்சத்தில் உடனடியாக ஏற்ற அளவிற்கான உள்ளாடையை தேர்வு செய்து அணிவது நல்லது.

இதுதவிர பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் மார்பக முலைக் காம்புகளில் வலியை ஏற்படுத்தும்.

குழந்தைகள் தாயிடம் தாய்ப்பால் பருகும் சமயத்தில், சில நேரம் கூறிய புதிய பற்களால் எதிர்பாராமல் கடித்துவிட்டால், உணர்ச்சி அதிகமாக உள்ள மார்பக காம்புகளின் பகுதிகளில் அதிகளவு வலி ஏற்படும்.

அதேபோல தாய்ப்பால் கொடுக்கும் போது பாலின் ஓட்டம் சீராக செல்லவில்லை என்றாலும் மர்பக வலி ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது பால் வீக்கமடையலாம் அல்லது முலையழற்சி என்று அழைக்கப்படுகிறது.

அதேபோன்று மார்பகங்களில் அசாதாரணமான வகையில் திரவம் நிரம்பிய கட்டிகள் தோன்றுவதும் கூட, உங்கள் மார்பகங்களில் ஏற்படும் வலியை ஏற்படுத்தும்.

அதாவது தந்தை மற்றும் தாய் பரம்பரை வழியில் உள்ள நபர்களுக்கு எக்சிமோ எனப்படும் மார்பக காம்புகளில் அரிப்பு மற்றும் வெடிப்புகளின் காரணமாக நீர்மம் சுரக்கும் பிரச்சனை இருக்கும்.

உங்கள் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு மார்பக வலி ஏற்படக் காரணம் (Nipple Pain Causes) என்ன என்று பார்த்தால் இதுபோன்ற சாதாரண நிலமைகளே பெரும்பாலும் வலியை ஏற்படுத்துகின்றன.

இது தவிர கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகின்றது. அதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

சரி மார்பக வலி நீங்க என்ன செய்யலாம்?

முதலில் மார்பக வலியை கண்டு பயப்படாமல் தைரியமாக இருப்பதுடன் அவை தொடர்ந்து இருக்கும் போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

முதலில் மார்பு வலி வரும் போது வேறு என்னமாதிரியான அறிகுறிகள், அசெளகரியங்களை உணர்கிறீர்கள் என்பதை மட்டும் கவனியுங்கள். அதற்கேற்றாற் போல சில விடயங்களை செய்தாலே மார்பக வலி குறைந்துவிடும்

சைவ உணவு வகைகள் அதிகம் எடுத்துகொள்பவர்கள், கொழுப்பு நிறைந்த உணவு எடுத்து கொள்பவர்கள், மது புகை பழக்கம் இருக்கும் பெண்கள் இதைத் தவிர்ப்பதன் மூலம் இந்த மார்பு வலியை எளிதாக தவிர்க்கலாம்.

மார்பகங்கள் விரிவடையும் போது அரிப்பு, புண் மற்றும் வலியில் இருந்து விடுபட சூடு தண்ணீரில் ஒத்தடம் கொடுப்பது மற்றும் மசாஜ் செய்வது உதவியாக இருக்கும்.

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை கொண்டு மெதுவாக விரல்களால் மசாஜ் செய்து விடலாம். இது உங்கள் மார்பகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

உணவு பழக்கங்களில் மாற்றங்களை கடைபிடிப்பதோடு வாரத்துக்கு மூன்று நாள் உடற்பயிற்சி செய்வதும் கூட இந்த பிரச்சனையை அதிகரிக்காமல் தடுக்கும்.

பூப்படைந்த பெண்கள் உள்ளாடை அணியும் போது அதிக கவனம் எடுத்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஆலோசனை எடுத்து கொள்வதும் நல்லது.

இதற்கு மேலதிகமாக மார்பகத்தில் கட்டிகள் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் மார்பக புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்க வாய்ப்புள்ளது.

ஆகவே இது குறித்த சந்தேகத்தை தீர்ப்பதற்கும், ஆரம்ப கட்டத்தில் அறிந்து சிகிச்சை பெறுவதற்கு மருத்துவரை ஆலோசித்து தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளவது நல்லது.

Nipple pain causes – மார்பக வலி ஏற்டக் காரணம் இதுபோன்ற சில காரணங்கள் தான். நாம் தைரியமாக பெரிதாக குழப்பிக் கொள்ளாமல் இருந்தாலே எல்லம் சரியாகி விடும்.

தகவல்கள் – சமயம், செய்திப் புனல்

Leave a Reply