நாட்டு மக்களுக்கு விஷேட அறிவிப்பு – உடனே 1977 க்கு அழையுங்கள்

அரிசி மற்றும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை (Maximum Retail Price Sri Lanka) மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அரிசி மற்றும் சீனி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை (Maximum Retail Price Sri Lanka) முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்புச் சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சிவப்புச் சீனியின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கீரிச் சம்பா கிலோ ஒன்றின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அல்லது சிவப்புச் சம்பா அரிசி கிலோ ஒன்றின் விற்பனை விலை 103 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிவப்பு நாடு கிலோ ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பச்சை அரிசி கிலோ ஒன்றின் அதிகூடிய விலை 95 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Maximum Retail Price Sri Lanka for rice and sugar - Tamil News Today

இந்த விலையை விடவும் அதிக விலைக்கு கடைக்காரரோ அல்லது வர்த்தக நிறுவனங்களோ விற்பனையில் ஈடுபட்டால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்தவும். நுகர்வோர் அதிகார சபை ஊடாக சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக் கை எடுககப்படும். அத்துடன்,

கட்டுப்பாட்டு விலையை மீறும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் தண்டப்பணமும் அதிகரிக்கப்படவுள்ளது இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

Leave a Reply