முக்கிய பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Exam date 2021 A/L - Tamil news today - இன்றைய செய்திகள் தமிழ்

கோவிட் -19 காரணமாக பிற்போடப்பட்ட (Exam date 2021 A/L) க. பொ. த உயர் தரம், சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்தார். கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை  (Exam date 2021 A/L) நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடத்தவும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை அடுத்த (2022) வருடம் பெப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை நடத்தவும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளை நவம்பர் 14 ஆம் திபதி நடத்தவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவை முன்னாள் கல்வி அமைச்சரின் அறிவுரையின் கீழ் முன்மொழியப்பட்ட திகதிகள் என்றும் இத் திகதிகளில் கோரிக்கைகள் மற்றும் சூழ்நிலைகளை பரிசீலித்த பிறகு இதில் மாற்றம் ஏற்பலாம்” என்றும் அவர் மேலும் கூறினார்

மேலும் தன்னால் இது தான் இறுதியான திகதி என்று உறுதியாக குறிப்பிட முடியாது என்றும் இவை முன்மொழியப்பட்ட திகதிகள் என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.

Exam date 2021 A/L - Tamil news today - இன்றைய செய்திகள் தமிழ்

இதேவேளை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.

பெரும்பாலான மேற்குலக நாடுகளில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கின்ற போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டன என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply