சற்று முன்னர் வௌியான அறிவிப்பு – ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டது

Colombo Curfew News Today - Sri Lanka Tamil News Website | Ceylon

Colombo Curfew News Today – நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சற்றுமுன் அறிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம்திகதி முதல் 30 ஆம்திகதி வரை அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு, பின்னர் தளர்த்தப்படாமல் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்க கடந்த கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் கொவிட் தடுப்பு செயலணி கூடிய வேளையில் எதிர்வரும் 13 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Colombo Curfew News Today - Sri Lanka Tamil News Website | Ceylon

More Sri Lanka Tamil News Today மேலும் இன்றைய இலங்கைச் செய்திகள்

05 பெண்களை ஆசை காட்டி மோசடி செய்த இராணுவ வீரர் இரண்டு வருடங்களின் பின் சிக்கினார்
வாகனங்களின் திடீர் விலை உயர்வு தொடர்பில் வௌியாகியுள்ள புதிய தகவல்

பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் வௌியான செய்தி

Colombo Curfew News Today – Ceylon nation

Leave a Reply