தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் பிரித்தானிய அரசு எடுத்துள்ள தீர்மானம்

விடுதலை புலிகள் மீதான தடை நீடிப்பு - பிரித்தானியா | Tamil

பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்துவந்த தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை, தொடர்ச்சியாக நீடிப்பதற்கு அந்த நாட்டு உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் பிரித்தானிய உள்துறை அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் அந்த நாட்டின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிற்குள் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை யை நீக்குமாறு இதற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் முன்னணி அமைப்பு ஒன்றினால் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டம் 2000, சரத்து 7ன் கீழ் நிறைவேற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை மீளப்பெறுமாறு தாக்கப்பட்ட விண்ணப்பத்தினை ஆராய்ந்த பிரித்தானிய உள்துறை அமைச்சர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் என முடிவு எடுத்துள்ளார்

இதன்மூலம் ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய ரீதியாக 30 நாடுகளுக்கு மேல் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் மீதான தடை நீடிப்பு - பிரித்தானியா | Tamil

உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தையும் விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு  இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என வௌிவிவகார அமைச்சு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply