இடியுடன் மழை பெய்ய சாத்தியமுள்ள பிரதேசங்கள்

வானிலை செய்திகள் இன்று Today News in Sri Lanka

வானிலை செய்திகள் இன்று – சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தொட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். வானிலை செய்திகள் இன்று

Leave a Reply