மக்களின் வருமானத்தில் 05 வீத வரியா? அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

மக்களின் வருமானத்தில் 05 வீத வரி அறிவிடுவது தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்ற வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் முன்மொழிவு அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது சேவைகளைத் தொடர்வதற்காக வரி வசூலிக்க அமைச்சர் குணவர்தன முன்வைத்த முன்மொழிவு தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, இது அமைச்சரின் தனிப்பட்ட கருத்து என்றும், இது தொடர்பில் அரசாங்கம் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply