லொஹான் ரத்வத்த பதவியை இராஜினாமா செய்தார்

லொஹான் ரத்வத்த பதவியை இராஜினாமா செய்தார்

இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு லொஹான் ரத்வத்த வுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் கடுமையாக அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

இத்தாலியிலிருந்து தொலைபேசியின் ஊடாக லொஹான் ரத்வத்தவை தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.

விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பணித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்றிருந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து, அவர்களில் இருவரை முழந்தாளிட வைத்து, தனது கைத்துப்பாக்கியை எடுத்து, சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்​டியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தூதுவரும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைதிகளை தவறாக நடத்துவது கண்டிக்கத்தக்கது. என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைப்பின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

லொஹான் ரத்வத்த பதவியை இராஜினாமா செய்தார்

மண்டேலா விதிகளின்படி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கூறினார்.

சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் போதை மறுவாழ்வு தொடர்பான எங்கள் பணிகளில், சிறையில் உள்ள அனைவரின் உரிமைகளையும் நிலைநாட்டும் திறனை வலுப்படுத்த ஐ.நா., இலங்கை செயல்படுகிறது மற்றும் கைதிகளை தவறாக நடத்துவதை கண்டிக்கிறது, ”என்று ஹனா சிங்கர்-ஹம்டி டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Leave a Reply