தற்போது கொவிட், டெல்டாவை விட பயங்கரமான லெம்டா

லம்டா வைரஸ் ஆபத்தானது - News tamil Sri lanka, tamil news today

கொவிட் மற்றும் டெல்டா வைரசையும் விட மிகவும் கடுமையான லம்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், தற்போது பயன்படுத்தப்படுகின்ற தடுப்பூசிகளின் மூலம் நன்மை கிடைக்கும் என நம்புவதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் மருந்துவியல் தொடர்பான பேராசிரியர் விசேட வைத்தியர் ப்ரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்தார்.

லம்டா வைரஸ் , கொவிட் வைரஸ் எல்பா வைரஸை போல் இல்லை என்றாலும், டெல்டா வைரசுக்கு கொவிட் தடுப்பூசி மூலம் பாதுகாப்பு கிடைப்பதாக தெரிய வந்துள்ளதால், எதிர்காலத்தில் வரக்கூடிய புதிய வகை வைரஸ் திரிபுகளுக்கும் தடுப்பூசி மூலம் பாதுகாப்பு பெறலாம் என கருத முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேபோல், கொவிட் வைரஸின் பல்வேறு திரிபுகள் வந்தாலும், இன்று பயன்படுத்தப்படும் அதே சிகிச்சை முறைகளைப் பயன்படுத்த முடியும்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே விசேட வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி இதனை தெரிவித்தார்.

இதற்கான மிகச் சிறந்த தீர்வு தடுப்பூசி முறையே ஆகும். தடுப்பூசி வழங்கப்படுவதால் வைரஸ் தொற்று குறைவடைகின்றது.

லம்டா வைரஸ் ஆபத்தானது - News tamil Sri lanka, tamil news today

மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றதன் பின்னர் வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மிகக் குறைவானதாகவே இருக்கும்.

இதன் மூலம் பாதிப்புக்கள் ஏற்பட்டாலும் கூட மரண வீதம் குறைவாகவே காணப்படும்.

தடுப்பூசி பெற்ற ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவும் வீதம் குறைவு போன்ற நன்மைகள் இதில் காணப்படுவதாகவும் விசேட வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி மேலும் சுட்டிக்காட்டினார்.

தகவல் அரசாங்க தகவல் திணைக்களம்

Leave a Reply