ரிசாத் பதியுதீனின் அறையில் இருந்து கையடக்க தொலைபேசி மீட்பு

ரிஷாத் பதியுதீனின் சிறை அறையில் கைததொலைபேசி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறை அறையில் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மகசின் சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மகசின் சிறையின் பிரதான சிறை அதிகாரி மற்றும் இன்னொமொரு அதிகாரி ரிஷாட்டின் சிறைக் கூடத்திற்கு சென்றபோது அவர் தொலைபேசியை தூக்கியேறிந்தார் என்றும் ஆணையாளர் கூறினார்.

மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply