யாழ்ப்பாணத்தில் உடனடியாக முடக்கப்பட்ட மூன்று பிரதேசங்கள்

யாழ்ப்பாணத்தில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

நாட்டில் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

அதன்படி, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply