மத்திய வங்கி வௌியிட்டுள்ள விஷேட அறிவிப்பு – சலுகையை நீடிக்கவும்

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பொன்று

கொவிட்-19 பரவலால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைகளை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Ceylon Nation

பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை வழங்கப்பட்ட சலுகைகளை நீடிப்பதனை பரிசீலனையில் கொள்ளுமாறு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும், உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் மத்திய வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தச் சலுகைகள், பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு 2022 ஜனவரி முதல் தொடர்ந்து தங்கள் நிலுவைச் தொகைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply