சன்ஷைன் சுத்தா சுட்டுக் கொல்லப்பட்டார்

போதைப்பொருள் வர்த்தகர் சன்ஷைன் சுத்தா சுட்டு கொலை

பிரபல போதைப்பொருள் விநியோகஸ்தரான ‘சன்ஷைன் சுத்தா’ என்ற அமில பிரசன்ன ஹெட்டிஹேவா இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

சில காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் மாத்தறை வரகாபிட்டிய பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர், மாகந்துரே மதூஷுக்கு மிகவும் நெருக்கமான உதவியாளராக செயற்பட்டு வந்திருந்த ஒருவராவார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply