பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் வௌியான செய்தி

போக்குவரத்து செய்தி - Today news in Tamil | தமிழ் செய்திகள்

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்துக்களை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவைகளை முன்னர் காணப்பட்ட வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடித்தாலும் மாகாணங்களுக்கு உட்பட்டு பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடித்தால் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறமாட்டதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply