பிரதமர் தவறான கருத்தை கூறப்போகிறார் – அதிரடிக் கருத்தை வௌியிட்ட கார்தினால்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தவறாக வழிநடத்தப் போகிறார்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக சர்வதேச தரப்பு மற்றும் பரிசுத்த பாப்பரசரிடம் தவறான கருத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக பாப்பரசரை தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் இத்தாலியின் பொலோக்னா நகரில் நடைறெவுள்ள சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதையடுத்து வத்திகானிலுள்ள பரிசுத்த பாப்பரசரை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமான விசாரணை குறித்தும் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை தெளிவுப்படுத்தவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்த தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் குறித்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச தரப்பு மற்றும் பரிசுத்த பாப்பரசர் ஆகியோருக்கு தெளிவுபடுத்தவுள்ளது.

இதன் மூலம் சர்வதேச தரப்பு மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசரிடம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக பிழையான கருத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் செயற்படுகிறது.

இதற்கான நடவடிக்கைகளை நாட்டின் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருவகின்றனர்.

தற்போது உயிர்த்த ஞாயிற தின தாக்குதல் குறித்து இந்த அரசாங்கம் சர்வதேசத்தை அணுக நடவடிக்கை எடுத்துள்ளது. நாமும் இது தொடர்பில் சர்வதேசத்துக்கு அறிவிக்கவுள்ளோம்.

கடந்த ஜூலை 12 ஆம் திகதி ஜனாதிபதிக்க கடிதமொன்றை அனுப்பிருந்த போதும் , அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அவர்கள் சர்வதேசத்தை நாடினால், நாமும் சர்வதேசத்தை நாடுவோம். எமக்கும் அதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

Leave a Reply