பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இன்று எடுக்கப்பட்ட தீர்மானம்

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இன்று எடுக்கப்பட்ட தீர்மானம்

பாடசாலை செய்தி – 200க்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளை சுகாதார ஒழுங்கு விதிகளுக்கமைய இன்னும் இரண்டு வாரங்களின் பின் மீண்டும் திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.

நாட்டில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட சுமார் 5,000 பாடசாலைகளை முதலில் திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை மாத்திரம் கொண்ட பாடசாலைகளை முதலில் திறக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது கல்விதுறைசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பாடசாலை போக்குவரத்து சேவை ஊழியர்கள் விரைவில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லொஹான் ரத்வத்த பதவியை இராஜினாமா செய்தார்

இதுவரை நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு ஒரு விஷேட செய்தி

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இன்று எடுக்கப்பட்ட தீர்மானம்

இதேவேளை 15 வயதுக்கு மேற்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடுத்த மாத முற்பகுதி முதல் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்திய குழு உறுப்பினர் நளின்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலை செய்தி

Leave a Reply