பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வௌியான செய்தி

கொரோனா ஒழிப்பு குழுவுடனான அடுத்த கூட்டத்தின் போது பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் செய்வது தொடர்பான சுகாதார பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கனவே சுகாதார துறை தலைவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளது. அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் இந்தக் குழுவைச் சந்திக்க உள்ளார்.

மேலும், பாடசாலைகள் திறப்பது தொடர்பாக பல முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். 7 வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை முதலில் திறக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரை.

1, 2, 3 மற்றும் 4 வகுப்புகளை முதலில் திறக்க வேண்டும் என்ற மற்றொரு திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொவிட்-19 பரவல் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

வழிகாட்டல்களை தயாரிக்கும் குழுவின் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் செயற்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வௌியான செய்தி

இதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பாடசாலைகள் மீள ஆரம்பம் செய்தல் தொடர்பான தொழிநுட்ப குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply