அமைச்சர் பந்துலவுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறை

நெல் அரிசி ஆலை களை கைப்பற்றி சந்தைக்கு வழங்கவும்

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்காத பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளைக் கைப்பற்றி அவசரகால விதிமுறைகளின் கீழ் கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி நெருக்கடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது, அங்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் உணவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இதற்கான உடனடித் திட்டத்தை வகுக்குமாறு வர்த்தக அமைச்சருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply