உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிதி வழங்கியதாக கூறப்பட்ட தம்பதிக்கு நியுசிலாநதில் அகதி அந்தஸ்து

நியூசிலாந்து செய்திகள் - அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட நபர்

நியூசிலாந்து செய்திகள் – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிதி உதவி வழங்கிய நபர் ஒருவரிற்கு நியுசிலாந்து அகதி அந்தஸ்த்து வழங்கியுள்ளது என ரேடியோ நியுசிலாந்து தெரிவித்துள்ளது. குறிந்த நபர் தெரியாமல் நிதி வழங்கியவர் என ரேடியோ நியுசிலாந்து தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபருக்கு பயங்கரவாத இலக்குகள் பற்றி எதுவும் தெரியாது பணம் யாருக்கு செல்கின்றது எங்கிருந்து வருகின்றது என்பதும் தெரியாது என்பது குடிவரவு மற்றும் பாதுகாப்பு தீர்ப்பாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள தனது உறவினர் மற்றும் முகவர் ஒருவருடன் இணைந்து இந்த நபர் பணப்பரிமாற்ற திட்டம் மூலம் ஒரு மாதத்தில் பல தடவை பணம் அனுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் விசாரணைகளின் போது அவரது தமிழ் மனைவியை இலங்கை பொலிஸார் கைது செய்து சித்திரவதை செய்துள்ளனர்.

பின்னர் பணம் வாங்கிக்கொண்டு அவரை விடுதலை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து தம்பதிகள் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்கள் போலி கடவுச்சீட்டில் நியுசிலாந்து சென்றுள்ளனர், இதனை தொடர்ந்து அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் நம்பகதன்மை மிக்கவை என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் கருதும் பணப்பரிமாற்ற நடவடிக்கையுடன் கணவர் தொடர்புபட்டுள்ளதால் அவர் இலங்கையில் சித்திரவதை செய்யப்படலாம் என தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.

கணவர் தனது நடவடிக்கைகள் மூலம் தீவிரவாதத்திற்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கவில்லை, அவர்களது கொள்கைகளிற்கு ஆதரவளிக்கவில்லை, தான் பரிமாற்றிய பணம் அவ்வாறானவர்களிற்கு சென்றது என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நிதி வழங்கியவர்களை விசாரணை செய்து தண்டிக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்படும் அழுத்தங்களை கருத்தில் கொள்ளும்போது கணவரிடமிருந்து தகவல்களை பெறுவதற்காக அல்லது அவரிற்கு தெரிந்திருக்காத தகவல்களை பெறுவதற்காக அதிகாரிகள் சித்திரவதைகளை பயன்படுத்தாமல் விடமாட்டார்கள் என கருதமுடியாது என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

கணவர் சிங்களவர் ஆனால் வெளிநாட்டு முகவர் முஸ்லீம் பெண் அவரின் மனைவியின் சகோதரி முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தது அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பியிருக்கலாம் என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து செய்திகள்

Leave a Reply