நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் – சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையர்

நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல;- பலர் பலி - Tamil News

நியூசிலாந்தில் ஓக்லாந்து நகரில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குறித்த நபர், நியூசிலாந்தில் உள்ள பிரபல சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நுழைந்து பயங்கரவாத (கத்திக் குத்து) தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.

குறித்த இலங்கை நபர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவொரு பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆடெர்ன் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.  நகரத்தின் நியூலின் புறநகரில் உள்ள கவுண்டவுன் சூப்பர் மார்க்கெட்டில் மக்கள் மதியம் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேற்படி இலங்கை நபர் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினரின் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல;- பலர் பலி - Tamil News

குறித்த நபர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் போதனைகளால் ஈர்க்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தாக்குதல் நடத்தியவர் ISIS அமைப்பினால் தூண்டப்பட்ட ஒரு பயங்கரவாதி எனவும் அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர் எனவும் கூறினார்.

“இன்று நடந்தது இழிவானது, அது வெறுக்கத்தக்கது, அது தவறு,” என்று கூறிய அவர் 2011 இல் நியூசிலாந்திற்கு வந்த ஒரு இலங்கையரே இந்த தாக்குதல் நடத்தியவர் என விவரித்தார்.

Leave a Reply