நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் தொடர்பான விபரம் வௌியானது

நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கூடியிருந்த மக்கள் மீது கத்திகுத்து தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்தியபோது அவரை பின்தொடர்ந்து வந்த பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எட்டு வயதிலேயே கொழும்பு சென்று அங்கு கொழும்பு இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர், 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல்; சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையர்

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்தியவர் தொடர்பான விபரம்

நியூசிலாந்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் மர்ம நபர் திடீரென பொதுமக்கள் மீது கத்திக்குத்து நடத்தியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வெறும் 60 விநாடிகளில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஏற்கெனவே போலீஸாரின் கண்காணிப்பில் இருந்த நபர் என்பதால் உடனடியாக போலீஸார் முடிவெடுத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தகவல் – அத தெரண தமிழ்

Leave a Reply