துப்பாக்கியை காட்டி தமிழ் கைதிகளை அச்சுறுத்திய லொஹான் ரத்வத்தவை கைது செய்யவும்

துப்பாக்கியை காட்டி தமிழ் கைதிகளை அச்சுறுத்திய லொஹான் ரத்வத்தவை கைது செய்யவும்

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை கைது செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 12ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் தமிழ் கைதிகள் இருவரை முழந்தாளில் இருக்கச்செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை (UNHRC) அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐநா மனித உரிமை பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாகவும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ரத்வத்தேவை உடனடியாக பதவி நீக்க வேண்டுமென கட்சி வலியுறுத்தியுள்ளது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அவரை உடன் கைது செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

துப்பாக்கியை காட்டி தமிழ் கைதிகளை அச்சுறுத்திய லொஹான் ரத்வத்தவை கைது செய்யவும்

தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவின் டுவிட்டர் கணக்கில் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply