தமிழ் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் – சஜித்தின் அதிரடி அறிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தல் - சஜித் கண்டனம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் இழிவான சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் இது குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாவது,

அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசுக்கு கடப்பாடு உள்ளது.

இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவை கைது செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 12ம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்வேன் என சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்தியுள்ளார் என யாழ்.மாவட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் இருக்கச்செய்துள்ளதுடன் தனது துப்பாக்கியை காண்பித்து அவர்களை கொலை செய்துவிடுவேன் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மிரட்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கியை காட்டி தமிழ் கைதிகளை அச்சுறுத்திய லொஹான் ரத்வத்தவை கைது செய்யவும்

நவம்பரில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்பிக்கவுள்ள அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற வரவுசெலவுத் திட்டம்

Leave a Reply