இலங்கை வர ஆசைப்பட்ட யுவதிக்கு நடந்த ஏமாற்றம் – இரவு முழுவதும் கடலில்

தனுஷ்கோடி to இலங்கை - யுவதியை ஏமாற்றிய கும்பல்

தனுஸ்கோடி கடல் வழியாக படகொன்றில் இலங்கை யுவதியை சட்ட விரோதமாக நாட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியை சேர்ந்த யுவதியை இலங்கைக்கு அழைத்து செல்வதாக கூறிய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

​முள்ளிவாய்க்காலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை சந்திக்க செல்ல குறித்த யுவதி தீர்மானித்துள்ளார்.

​இதற்கமைய குறித்த யுவதி ராமேஸ்வரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகில் செல்ல முடிவு செய்து கடந்த 4 ஆம் திகதி சென்னையில் இருந்து பேருந்து மூலம் ராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளார்.

​பின்னர் ராமேஸ்வரத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த யுவதி, சட்டவிரோதமாக இலங்கை செல்வதற்காக தனுஸ்கோடியை சேர்ந்த ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.

​இதனையடுத்து, பாம்பன் சின்னபாலம் கடற்கரையில் தயாராகிவிருந்த படகு ஒன்றில் குறித்த யுவதி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

​குறித்த யுவதியை ஏற்றிச் சென்ற படகோட்டிகள் நீண்ட நேரமாக கடலில் சுற்றி விட்டு நள்ளிரவு 12 மணி அளவில் இலங்கை வந்து விட்டதாக தெரிவித்து தனுஸ்கோடி கடல் பகுதியில் அமைந்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

தனுஷ்கோடி to இலங்கை - யுவதியை ஏமாற்றிய கும்பல்

இதன்போது, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட கடலோர காவல்துறையினர் குறித்த இலங்கை யுவதியை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அவரை இலங்கைக்கு அழைத்து செல்வதாக கூறி ஏமாற்றிய பெண் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

Leave a Reply