விரைவில் வௌியாகவுள்ள வர்த்தமானி – 07 பொருட்களுக்கு தடை

தடை செய்யப்பட உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் - Tamil News

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சார்ந்த மேலும் 7 வகையான உற்பத்தி பொருட்களுக்கு தடை செய்யப்பட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Ceylon Nation

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் இந்த பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக் கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த 5 உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அத்துடன், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக் கூடிய பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் லன்ச்சீட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிளாஸ்டிக்கினால் உற்பத்தி செய்யப்படும் குளிர்பான குவளைகள், இடியப்ப தட்டு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் மலர் மாலைகள் உள்ளிட்ட 7 வித உற்பத்தி பொருட்கள் தடை செய்யப்பட உள்ள பட்டியலில் உள்ளடங்குவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் - Tamil News

மேலும் இன்றைய இலங்கை செய்திகளை வாசிக்க இங்கே அழுத்துங்கள்

Leave a Reply