குறுகிய காலத்தில் இலங்கை அடைந்துள்ள பாரிய வெற்றி

தடுப்பூசி இன்று வரை ஒரு ​கோடிக்கு மேல் ஏற்றப்பட்டுள்ளது

இலங்கையில் இன்று வரையான குறுகிய காலத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் 30 வயதிற்கும் மேற்பட்ட ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கோவிட் தடுப்பூசி நேற்று வரை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும்.

20 இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களுக்கு ஆறு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று வரை குறுகிய காலத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட ஒரு கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினத்தில் (10) மாத்திரம் 85,784 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 169,591 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி இன்று வரை ஒரு ​கோடிக்கு மேல் ஏற்றப்பட்டுள்ளது

இதுதவிர, இதுவரை 890,368 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 159,089 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 43,450 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

Leave a Reply