தடுப்பூசியின் பலன்கள் எப்போது கிடைக்கும்? அமைச்சர் வௌியிட்ட தகவல்

தடுப்பூசியின் பயன்கள் விரைவில் தெரியும் - Tamil News Website

தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் பயன்ககள் ஒக்டோபர் மாதத்திலேயே தெரியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்படுவதன் மூலம் நோய் தொற்று குறைவடைதல் உயிரிழப்புகள் மற்றும் மோசமாக பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைவடைதல் போன்றவற்றை ஒக்டோபர் மாத நடுப்பகுதியிலேயே காணமுடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே பத்து மில்லியன் மக்கள் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை விரைவில் முடிவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை ஆரம்பித்துவிட்டோம். அது விரைவில் பூர்த்தியடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில் அவர்கள் இரண்டாவது டோசினை பெறுவார்கள் அதன் பின்னர் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தப்பட்டும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளமைக்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியவேளை பல நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தயங்குவதே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் பயன்கள் விரைவில் தெரியும் - Tamil News Website

60வயதிற்கு மேற்பட்ட சிலர் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள தயங்குகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தேவையற்ற அச்சம் நீங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply