இலங்கையில் டெல்டா தொற்றாளர்கள் தொடர்பில் வௌியான அதிர்ச்சி செய்தி

டெல்டா வைரஸ் அறிகுறிகள் இலங்கை நோயாளர்களிடம்

இலங்கையில் தற்போது பதிவாகவும் தொற்றாளர்களில் 95.8 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்றுள்ள மாதிரிகளின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் ஊடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் பிரிவின் ஆய்வாளர்களான பேராசிரியர் நீலிகா மாளவிகே, வைத்தியர் சந்திம ஜீவந்தர உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் சில மாகாணங்களில் பதிவாகவும் தொற்றாளர்களில் 84 முதல் 100 % வரை டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply