இலங்கை தொடர்பில் கவலை அடைந்துள்ள ஆணையாளரின் காரசாரமான அறிக்கை

ஜெனிவா மாநாடு இலங்கை தொடர்பில் கவலையில்

ஜெனிவா மாநாடு இலங்கை தொடர்பில் கவலையில்

ஜெனிவா மாநாடு இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கண்காணித்து வருவதாக அதன் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் தமது இறுதி அறிக்கையை அடையாளம் காணப்பட்ட முக்கியத்துவம் மற்றும் பிரச்சினை தொடர்பில், மனித உரிமை பேரவையில் தெளிவுப்படுத்த விருப்பம் கொண்டுள்ளேன்.

இதற்கான தயார் நிலைகளுக்காக இலங்கை அரசாங்கமும் தமக்கு தகவல் வழங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்குமான அர்ப்பணிப்பை வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதற்கான உரிய மீளமைப்பு வேலைகளை முன்னெடுப்பதாகவும், ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவா மாநாடு இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது.

நேற்று ஆரம்பமான 48வது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மாநாடு இலங்கை – நேற்றைய உரையில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள்

இலங்கை தற்போது முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசாங்கத்தை நடத்தி செல்வதற்கான சவால்களுக்கு, இராணுவ மயமாக்கலை பொறுப்பற்ற வகையில் முன்னெடுக்கின்றமையே காரணமாகிறது.

உணவு பாதுகாப்பு மற்றும் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட் 30ஆம் திகதி இலங்கையில் புதிய அவசர கால விதிமுறைகள் அமுல்படுத்தப்படுத்தப்பட்டன.

அதிலும் இராணுவத்தினர் பணிகள் மேலோங்கியுள்ளன. அது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல அமைதியான போராட்டங்கள் மற்றும் நினைவுகூறல்கள் அதிகளவு பலத்தை பயன்படுத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளன,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

சிவில் சமூகத்தினர் தொடர்பான புதிய விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன,அவை அடிப்படை சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமானதாக்கப் போகின்றன,என்ற அச்சம் பரவலாக காணப்படுகின்றது.

அந்த வரைவு சாத்தியமான அளவு பொது விவாதத்தை அனுமதிக்கவேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பல அதிகளவு கவனத்தை ஈர்த்த மனித உரிமை சம்பவங்கள் குறித்த நீதித்துறை நடவடிக்கைகளில் உருவாகியுள்ள நிலைமை குறித்து நான் கவலை அடைந்துள்ளேன்.

2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில்11 பேர் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கைவிடுவது என்ற சட்டமா அதிபரின் தீர்மானமும் ஒன்றாகும்.

பல விசாரணைகளிற்கு அப்பாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களும் மதத்தலைவர்களும் உண்மை மற்றும் நீதி உடனடியாக நிலைநாட்டப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

அந்த தாக்குதல் நிகழ்வதை சாத்தியமாக்கிய முழுமையான சூழ்நிலையை பகிரங்கப்படுத்தவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2011 இல் அரசியல்வாதியொருவரை கொலை செய்தமைக்காக தண்டனை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியின் சமீபத்தைய பொதுமன்னிப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி செயல்முறையின் மீது நம்பிக்கையை சிதைக்கும் அபாயம் உள்ளது.

இந்த பின்னணியில் எனது அலுவலகம்; 46-1 தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்;பித்துள்ளது, ஒரு ஆரம்பகட்ட குழுவிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன

ஐநாவிடம் ஏற்கனவே உள்ள 120,000 தனிப்பட்ட பொருட்களை அடிப்படையாக கொணடு நாங்கள் ஏற்கனவே தகவல் மற்றும் ஆதார களஞ்சியத்தை உருவாக்கியுள்ளோம் இந்த வருடம் எங்களால் முடிந்தளவிற்கு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

வரவுசெலவுகள் தொடர்பாக தேவையான ஆதரவை அளிப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்யவேண்டும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆணையாளர் இந்த வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்தார். அது தொடர்பான உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

Leave a Reply