மூன்று மாதங்களில் உயிரிழக்கப் போகும் முக்கிய பிரமுகர் – பகீர் தகவலை வௌியிட்ட பிக்குனி

செய்திகள் தமிழ் - சிலோன் நேசன் | Ceylon Nation Tamil News

இலங்கையில் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் நாட்டை நேசித்த பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார் என பல்லேகலை கோதமி விகாரையின் விகாராதிபதி கோத்தமி பிக்குனி ஆரூடதம் கூறியுள்ளார்.

சிங்கள இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு பேய் புகுந்துள்ளது, சாமி வந்துவிட்டதென எல்லாம் பலர் கூறுகின்றார்கள். அப்படியில்லை எனக்குள் தோன்றும் விடயத்தை தான் நான் கூறுகின்றேன். நான் கூறுவதும் அவ்வாறே நடக்கும்.

அதற்கமைய இலங்கையில் பிரபலமான தலைவர் இன்னும் 3 மாதங்களுக்குள் உயிரிழப்பார். நான் பொறுப்புடன் தான் இதனை கூறுகிறேன். அவர் மக்களால் அதிகமாக நேசிக்கப்பட்ட ஒருவராகும். பல்வேறு விடயங்களை செய்த ஒருவராகும்.

யாராலும் எதிர்பார்க்க முடியாத ஒருவரே இறக்கவுள்ளார். அவர் சர்வதேசம் அளவில் புகழ் பெற்ற ஒருவராகும். அதனை நான் தற்போதே பொறுப்புடன் கூறிக் கொள்ள எதிர்பார்க்கின்றேன்.

எனினும் அவற்றை நம்மால் தடுக்க முடியாது. அத்துடன் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் யாராலும் எதிர்பார்க்க முடியாத இரண்டு பிரபலங்கள் படுத்த படுக்கையாகும் கொடூர நோய் ஒன்றினால் பாதிக்கப்படுவார்கள்.

செய்திகள் தமிழ் - சிலோன் நேசன் | Ceylon Nation Tamil News

அவர்களில் ஒருவர் பேச்சாற்றல் கொண்ட பிரபல பிரபுக்களில் ஒருவராகும். அவர்கள் கொடூர நோய்களினால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலைக்குள்ளாகுவார்கள்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் யாரும் எதிர்பாராத பல அதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெறும். அத்துடன் பலரின் கனவுகள் கலைந்து போகும். 2050ஆம் ஆண்டிலும் என்ன நடக்கும் என்று என தெரியும்.

எனினும் அவற்றை எல்லாம் நான் கூறப்போவதில்லை. நான் கூறுவது தீர்க்க தரிசனம் அல்ல. அவை எனக்கு கிடைத்த உலகளாவிய ஞானம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply