கொவிட் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சுகாதாரப் பிரிவின் விசேட செய்தி

சுகாதாரப் பிரிவினரின் விசேட செய்தி - News tamil Sri lanka

கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நபர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறே, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் முடியுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும் என விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் தொற்றால் உயிரிழக்கும் 30 வயதிற்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் அண்மைய நாட்களில் கனிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

நேற்று பதிவான 202 கொவிட் மரணங்களில் 30 வயதுக்கு குறைவான 5 பேர் அடங்குவதாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply