சீமெந்து விலையும் அதிகரிப்பு? புதிய விலை விபரம்

சீமெந்து விலை உயர்வு? News tamil Sri lanka - சிலோன் ​நேசன்

சீனி, சமையல் எரிவாயு, பால்மா உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு தொடர்பில் பேசப்பட்டுவரும் நிலையில், சீமெந்து மூடையொன்றின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, ஒரு மூடை சீமெந்து 950 ரூபா முதல், 1,005 ரூபா வரையில் சந்தையில் முன்னதாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது சீமெந்தின் விலை 1,100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறாயினும் சீமெந்து விலை அதிகரிப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது அதிகார சபையினால் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply