ரிசாத் பதியுதீனுக்கு கையடக்கத் தொலைபேசி வழங்கிய சிறைக்காவலருக்கு ஏற்பட்ட நிலை

சிறைக்காவலர் வழங்கிய தொலைபேசி - இலங்கைச் செய்தி

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் உத்தரவின் கீழ், மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனிடமிருந்து சிறைச்சாலை அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசி ஒன்றை மீட்டிருந்தனர்.

குறித்த தொலைபேசியை மெகசின் சிறையில் சேவையாற்றிய சிறை பாதுகாவலரே வழங்கியுள்ளமை தொடர்பில் தகவல்கள் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் குறித்த சிறைக்காவலரை ஒழுக்காற்று விசாரணைகளின் கீழ், வவுனியா சிறைச்சாலைக்கு உடனடியாக இடமாற்றம் செய்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம்) சந்தன ஏக்கநயக்க கூறினார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாத்திடமிருந்து தொலைபேசி மீட்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் சிறைச்சாலை உளவுப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில், அவருக்கு தொலைபேசியை குறித்த சிறைப் பாதுகாவலர் வழங்கியுள்ளமை தெரிய வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply