சாணக்கியனுக்கு சவால் விடுத்துள்ள மஹிந்த – நிரூபிப்பாரா சாணக்கியன்?

சாணக்கியனுக்கு சவால் விடுத்துள்ள மஹிந்த - நிரூபிப்பாரா சாணக்கியன்?

மாலைதீவுகளின் தீவுகளில் ஒன்றை நிரப்புவதற்காக இலங்கையிலிருந்து மணல் கடத்தப்பட்டமை நிரூபிக்கப்பட்டால், அமைச்சர் பதவியிலிருந்து மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகத் தயாராக இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அமைச்சருக்கும் இவ்விடயத்தில் தொடர்பு இருப்பதாக சாணக்கியன் எம்.பி நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று அமரவீர அறிவித்துள்ளார்.

மாலைதீவுகளில் உள்ள ஒரு தீவை நிரப்புவதற்காக இலங்கை மணலை மாலைதீவுகளுக்கு ஏற்றும் மோசடியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர் ஈடுபட்டதாக சாணக்கியன் எம்.பி பாராளுமன்றத்தில் நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

Leave a Reply