தனது தனிப்பட்ட கருத்தை அதிரடியாக வௌியிட்ட இராஜாங்க அமைச்சர் அமைச்சர்

தனது தனிப்பட்ட கருத்தை அதிரடியாக வௌியிட்ட இராஜாங்க அமைச்சர் அமைச்சர்

நாட்டில் நாளாந்தம் 5,000க்கும் அண்மித்த எண்ணிக்கையில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில் சமூகத்தில் சுமார் 50,000 கொவிட் தொற்றாளர்கள் வரை இருக்கக்கூடும் என இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்தியருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அதேபோல், மக்கள் தானாகவே சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் கடைப்பிடிப்பதன் ஊடாக கொவிட் நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

கொவிட் 19 கட்டுப்பாட்டிற்காக நாட்டை மேலும் ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு மூட வேண்டும் என்பது தனது தனிப்பட்டு கருத்து என கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

Leave a Reply