சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விஷேட வைத்தியர்கள் கூறியுள்ள திட்டம்

கோவிட் தடுப்பூசி தமிழ் - இன்றயை முக்கிய செய்திகள்

சிறுவர்களுக்கு கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கம், சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ளது.

அதன்படி செப்டெம்பர் மாதத்தில், 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்க வேண்டும் என்பது முதற்கட்ட நடவடிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் அவ்வாறான சிறுவர்கள் 30 ஆயிரம் பேரளவில் உள்ளதாக இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஒக்டோபர் மாத ஆரம்பத்தில், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள 6 இலட்சத்து 46 ஆயிரம் மாணவர்களுக்கும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 4 இலட்சத்து 21 ஆயிரம் மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்துவது அந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும்.

இந்த திட்டத்திற்கு அமைய, ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட ஏனைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றம் முன்னெடுக்கப்படும்.

இந்த யோசனை தொடர்பில், இன்று இடம்பெறவுள்ள கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி தமிழ்

கோவிட் தடுப்பூசி தமிழ் - இன்றயை முக்கிய செய்திகள்

Leave a Reply