ஒரு நாளைக்கு இரண்டு வேளை மாத்திரம் சாப்பிட வேண்டுகோள்

ஒரு நாளைக்கு இரண்டு வேளை மாத்திரம் சாப்பிட வேண்டுகோள்

ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் இரண்டு நேரமாக அதனை குறைக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் வரை அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தியாகங்களை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் உணவு உண்பதை தவிர்த்து இரண்டு வேளை சாப்பிட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் அனேகமான மக்கள் அவல நிலையில் உள்ளனர் என நான் நினைக்கின்றேன். எவரும் 2000 ரூபாயுடன் வாழ முடியாது என்பதால் நாங்கள் அது குறித்து கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

2000 ரூபாய்க்கு பதில் 20,000 ரூபாயை அரசாங்கத்தினால் வழங்க முடியும் என்றால் வழங்கியிருப்போம் என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாங்கள் அனைவரும் தியாகங்களை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்களும் எங்கள் சம்பளத்தினை கொவிட் நிதியத்திற்கு வழங்கியிருந்தோம், அனைவரும் இதுவரை ஒருநாளைக்கு மூன்று வேளை சாப்பிடுபவர்களாக இருந்தால் அவர்கள் இன்னும் சில நாட்களிற்கு இரண்டு வேளை மாத்திரம் உணவு உண்ண வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை மாத்திரம் சாப்பிட வேண்டுகோள்

அவ்வாறு வாழ்ந்தவாறு இந்த கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் நாங்கள் செய்யும் தியாகங்களே எங்கள் பிள்ளைகளின் எதிர்காலமாக அமையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply