இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கருத்தை ஏற்கிறோம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் (இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால்) வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. இதன்போது இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் (ஐ.நா மனித உரிமை ஆணையாளர்) மிச்சேல் பச்லெட் வாய்மூல அறிக்கை வெளியிட்டார்.

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியான சவால்கள் இராணுவமயமாக்கலின் மோசமான தாக்கத்தை வெளிக்காட்டுபவையாக அமைந்துள்ளன.

அத்துடன், இலங்கையில் அடிப்படை உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கான இடைவெளி, ஜனநாயகக்கட்டமைப்புக்கள், நிலைபேறான அபிவிருத்தி ஆகிய விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வலு இழந்துள்ளமையினையும் அவதானிக்க முடிவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

இது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மேலும் தெரிவிக்கையில்,

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடரில் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் வெளிப்படுத்தப்பட்ட கரிசனைகளை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கருத்தை ஏற்கிறோம்

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை பிரிட்டன் தொடர்ச்சியாக வழங்கும் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply