ஊரடங்கு நீக்கப்படுமா? நீடிக்கப்படுமா? இராணுவத் தளபதியின் அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா?

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6ம் திகதிக்கு பின்னர் தளர்த்துவதா? அல்லது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே இந்த தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியே, இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது அல்லது நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பில் உடனடியாக தீர்மானங்கள் எதையும் எட்ட முடியாது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிடுகின்றார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 625 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 63 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா?

அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 62,710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் மற்றும் பிரவேசிக்கும் 13 இடங்களில் நேற்றைய தினம் 858 வாகனங்களும் மற்றும் 1,470 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply