நாட்டு மக்களுக்கு விஷேட அறிவிப்பு வௌியானது – அது தொடர்பில் பீதியடைய வேண்டாம்

உணவு பற்றாக்குறை நாட்டில்? அரசின் விஷேட அறிவிப்பு

நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி பீதியடைய வேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியையும் அரசாங்கம் மறுத்துள்ளது.

நாட்டு மக்களுக்கு தேவையான அரிசி மற்றும் சீனி தற்போது கையிருப்பில் உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply