மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு விஷேட அறிவிப்பு

இலங்கை மின்சார கட்டணம் செலுத்துக Tamil News of Sri Lanka

நுகர்வோர் தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின்சார கட்டணம் செலுத்துங்கள் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ளச் சரியான முறையில் மின் கட்டணத்தைச் செலுத்துமாறு மின்சார சபை அறிவித்துள்ளது.

எனவே, நுகர்வோர் தங்களது மின்சாரக் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துமாறு அந்தச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

மின்சாரக் கட்டணங்களை வீட்டிலிருந்தவாறே செலுத்த முடியும் என்றும், இலங்கை மின்சார சபை இணையத்தளம் அல்லது கையடக்கத் தொலைபேசியைப் பயன் படுத்திச் செலுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்று வரை இலங்கை மின்சார சபை மக்களின் தேவைகளுக்காக அத்தியாவசிய செலவுகளைச் செய்வதற்கும் எரிபொருளைப் பெறுவதற்கும் பெரும் செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது என்றும், நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானம் பாரிய உதவியாக இருக்கும் என்றும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று சூழ்நிலையில் நாளாந்த மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது எனவும் கடினமான சூழ்நிலையிலும் மின்சார சபை தனது தேசிய கடமையைத் தொடர்ந்து செய்து வருகிறது எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார கட்டணம் செலுத்துக Tamil News of Sri Lanka

Leave a Reply