விடுதலைப் புலிகளை அழித்து 10 வருடங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத தாக்குதல்

இலங்கைச் செய்திகள் - மைத்திரிபால சிறிசேனவின் கருத்து

இலங்கை செய்திகள் – விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழித்து 10 வருட காலத்தை நிறைவு செய்தபோது இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் பல விடயங்களை வெளிப்படுத்தியது.

இத்தாக்குதல் மற்றும் இத்தாக்குதலை தொடர்ந்து அரசியலில் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை குறித்து சுதந்திர கட்சி அதிக அவதானம் செலுத்தியுள்ளது. என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு காணொளி முறைமை ஊடாக இடம்பெற்ற உரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் தீவிரவாத தாக்கதல் முன்னெடுக்கப்பட்டன.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், அதற்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமை தொடர்பிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன் தலிபான் அமைப்பின் மீள் வருகையினால் ஆசிய நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் குறுகிய அரசியல் நோக்கங்களை விடுத்து சுதந்திர கட்சி ஆழமாக ஆராய்ந்துள்ளது.

இலங்கைச் செய்திகள் - மைத்திரிபால சிறிசேனவின் கருத்து

21 ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியல் மற்றும் பொருளாதார முறைமை தொடர்பில் சுதந்திர கட்சி திட்டம் வகுத்துள்ளது. கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டன. நாட்டின் கௌரவத்துக்கு முன்னுரிமை வழங்கி நாடு முன்னேற்றமடைய வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கி கட்சியையும், நாட்டையும் முன்னேற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். – இலங்கை செய்திகள்

Leave a Reply