ஈஸ்டர் தாக்குதல் – 25 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் - மௌலவிகள் உள்ளிட்ட 25 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மௌலவிகள் உள்ளிட்ட 25 பேருக்கு, எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம்திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு தமித் தொடவத்த, அமல் ரணராஜா, நவரட்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற விசேட நீதிபதிகள் ஆயத்தில் இன்றைய தினம் பரிசீலனை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த சந்தேகநபர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதுடன் விசாரணைக்கான திகதியிடப்பட்டது.

அதற்கமைய, இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply