05 பெண்களை ஆசை காட்டி மோசடி செய்த இராணுவ வீரர் இரண்டு வருடங்களின் பின் சிக்கினார்

இலங்கைத் தமிழ் செய்திகள் - Ceylon Nation | Ceylon Nation News

இலங்கைத் தமிழ் செய்திகள் – பெண்களை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த இரு வருடங்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முன்னாள் இரானுவ வீரர், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பத்திரிகைகளில் வெளியாகும் திருமணம் தொடர்பிலான விளம்பரங்களை மையப்படுத்தி பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர், தன்னை உயர் பதவியில் உள்ள ஒருவராக சித்திரித்து திருமணம் செய்துகொள்ளும் உறுதியை பெண்களுக்கு வழங்கியுள்ளதாகவும், தனது தாயாருக்கு புற்று நோய் எனக் கூறி அவர்களிடம் கைமாற்றுக்கு பணம் பெற்றுக்கொண்டு, அதனை திருப்பிக் கொடுக்காது இந்த மோசடிகளை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி. அதிகாரிகள் 2 வருடங்களின் பின்னர் சந்தேகநபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ் செய்திகள் - Ceylon Nation | Ceylon Nation News

மேலும் இலங்கைத் தமிழ் செய்திகள் – Today news in Tamil

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் பிரித்தானிய அரசு எடுத்துள்ள தீர்மானம்

வௌியானது அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் – நேற்று நள்ளிரவு முதல் அமுல்

Leave a Reply