யாழில் நடந்த சோகம் – இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் கொரோனாவால் மரணம்

இரட்டை குழந்தைகள் பெற்ற தாய் கொரோனாவுக்கு பலி

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா என்ற 25 வயது நிறைமாத கர்ப்பிணித் தாய் கொரோனா தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 4ஆம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால், தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 8ஆம் திகதி இரட்டை குழந்தைகள் பிரசவித்துள்ளதுடன், தாயார் 9ஆம் திகதி கொரோனாவின் காரணமாக உயிரிழந்தார்.

இவரது மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

குழந்தைகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

Leave a Reply