இலங்கை ரூபாவின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு

இன்றைய நாணய பெறுமதி - தலைப்புச் செய்திகள்

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் இன்றைய நாணய பெறுமதி  திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டிருந்த நாணய மாற்று பெறுமதி வீதங்களுக்கு அமைய கடும் வீழ்ச்சி சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி, இன்றைய தினம் திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வழங்கப்பட்ட தினசரி நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் பாரிய ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.

அதற்கமைய அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 203 ரூபாயாக காணப்பட்ட நிலையில் இன்று 202.99 ஆக குறைந்துள்ளது.

பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் நேற்று 317.47 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 282.32 ஆக குறைந்துள்ளது.

யூரோவின் விற்பனை விலை நேற்று 273.52 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 243.52 ரூபாயாக குறைந்துள்ளது.

கனேடிய டொலர் நேற்று 183.38 ரூபாயாக அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று 163.38 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply