இந்திய கிரிக்கட் வீரர் ஷிகர் தவான் மனைவி அயேசாவுடன் விவாகரத்து

இந்தியாவின் ஷிகர் தவான் மனைவியுடன் விவாகரத்து

கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக இந்தியாவின் கிரிக்கெட் அணிவீரர், ஷிகர் தவான் மனைவி அயேஷா முகர்ஜி இன்ஸ்டாகிராம் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். Ceylon Nation

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான், தற்போது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கெபிட்டல்ஸ் அணிக்காக விளையாடுவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் இருபது20 தொடரில் பங்கேற்ற இளம் இந்திய அணியை ஷிகர் தவான் தலைமையேற்று வழிநடத்தியிருந்தார்.

இவர் கடந்த 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார்.

ஆயிஷா ஏற்கனவே திருமணமானவர். இவர் தனது முதல் கணவரை 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து இந்தியாவின் ஷிகர் தவான் உடன் மறுமணம் செய்து கொண்டார்.

ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஷிகர் தவான் மற்றும் ஆயிஷாவுக்கு பிறந்த ஆண் குழந்தையுடன் ஒன்றாக வசித்துவருகின்றனர்.

இந்த நிலையில் ஷிகர் தவானும், ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முகர்ஜி தங்களது விவாகரத்து குறித்து ஒரு நீண்ட இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “விவாகரத்து என்ற வார்த்தை அழுக்கானது. நான் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்ய உள்ளேன்.

வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை, எவ்வளவு அர்த்தங்கள் அதில் புதைந்திருக்கின்றன என்பதை முதல் முறை விவாகரத்து ஆகும் போது புரிந்து கொண்டேன்.

முதல் முறை விவாகரத்து ஆகும் போது மிகவும் பயந்தேன் நான் மிகவும் தவறான ஒரு விஷயத்தை செய்வதாகவும், தோல்வி அடைந்தவளாகவும் உணர்ந்தேன்.

 சுயநலவாதியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாக உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு அநீதியை ஏற்படுத்தியதாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை. இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனை கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது. ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களை கற்றுக்கொண்டேன். நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து. விவாகரத்து என்பதற்கு நீங்கள் என்னென்ன அர்த்தங்கள் கொடுக்கிறீர்களோ அது தான் விவாகரத்து” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். எனினும், விவாகரத்து தொடர்பாக ஷிகர் தவான் தனது நிலையை உறுதிப்படுத்தவில்லை. ஷிகர் தவான் மனைவியின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

சுயநலவாதியாகவும், அனைவரையும் காயப்படுத்தியதாக உணர்ந்தேன். என்னுடைய பெற்றோரை கைவிட்டதாக உணர்ந்தேன்.

என்னுடைய குழந்தைகளுக்கு அநீதியை ஏற்படுத்தியதாக கருதினேன். விவாகரத்து அவ்வளவு மோசமான வார்த்தை. இப்போது நினைத்துப் பாருங்கள் இரண்டாவது முறையாக நான் அதனை கடந்து செல்கிறேன். இது மிகவும் கொடூரமானது. இரண்டாவது முறையாக திருமணம் முறிந்த பின்னர் மிகவும் பயங்கரமாக இருந்தது.

ஆனாலும் விவாகரத்தின் அர்த்தங்களை கற்றுக்கொண்டேன். நான் எப்போதும் இருப்பதைக் காட்டிலும் வலிமையானவளாக இருப்பதே விவாகரத்து.

விவாகரத்து என்பதற்கு நீங்கள் என்னென்ன அர்த்தங்கள் கொடுக்கிறீர்களோ அது தான் விவாகரத்து” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

எனினும், விவாகரத்து தொடர்பாக ஷிகர் தவான் தனது நிலையை உறுதிப்படுத்தவில்லை. ஷிகர் தவான் மனைவியின் இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply